fbpx
Homeபிற செய்திகள்கோவை யூகோ வங்கி சார்பில் வீடு, அபார்ட்மெண்ட்ஸ் குடியிருப்புகள் விற்பனை சிறப்பு கடன் முகாம்

கோவை யூகோ வங்கி சார்பில் வீடு, அபார்ட்மெண்ட்ஸ் குடியிருப்புகள் விற்பனை சிறப்பு கடன் முகாம்

கோவை யூகோ வங்கி சார்பில் வீடு மற்றும் அபார்ட்மெண்ட்ஸ் குடியிருப்புகள் விற்பனை சிறப்பு கடன் மேளா, ராம்நகர் பேராநாயுடு லேஅவுட் நேரு தெருவில் உள்ள ஹோட்டல் மங்களா இன்டர்நேஷனலில் நாளை 15ம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் ஸ்ரீவாரி, சுக்ரா, சிரிலா, மேபிளவர், கேஜி குரூப் டவுன் சிட்டி, ஆர்எம்சி, ராயல் ஷெல்டர், கிரீன்பீல்டு ஹவுசிங், ஏ2இஎம், இந்தியா பில்டர்ஸ், ஷோபா, ஸ்ரீ சாய் பில்டர்ஸ், ஆர்.ஆர். ஹவுசிங், கே.கே.பில்டர்ஸ், எம்ஆர்கே, ஆருத்ராஸ், புரவங்கரா, சுரா ஹவுஸ், ஐங்கரன் கேஸில் உள்ளிட்ட பிரபல பில்டர்கள் பங்கேற்று வீடுகள், அபார்ட்மெண்ட் குடியிருப்புகளை விற்பனை செய்கிறார்கள்.

மேலும் அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள் விலை ரூ.18 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் வீடுகள், அபார்ட்மெண்ட் குடியிருப்புகளை தேர்ந்தெடுத்ததும் உடனடியாக குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கான ஒப்புதலை முகாமிலேயே உடனடியாக வழங்க யூகோ வங்கி ஏற்பாடு செய்துள்ளது.

பரிசீலனை கட்டணம் டாக்குமெண்ட் கட்டணம் ஏதுமில்லை.
இந்த சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் பங்கேற்று வீடுகள், குடியிருப்புகளை குறைந்த வட்டி வீதத்தில் வாங்கி பயனடையுமாறு யூகோ வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. அனுமதி இலவசம்.

படிக்க வேண்டும்

spot_img