fbpx
Homeபிற செய்திகள்இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலுடன் ‘பாலிகேப்’ அதிகாரப்பூர்வ கூட்டாண்மை

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலுடன் ‘பாலிகேப்’ அதிகாரப்பூர்வ கூட்டாண்மை

நிதியாண்டு 21&22-ல் ரூ.122 பில்லியனுக்கும் அதிக மான ஒருங்கிணைக்கப்பட்ட விற்றுமுதலுடன், இந்தி யாவின் முன்னணி எலக்ட்ரிக்கல் பொருட்கள் நிறுவனமான பாலிகேப் இந்தியா லிமிடெட் (PIL), இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலுடன் அதிகாரப் பூர்வ கூட்டாண்மையை அறிவித்தது.

இந்த கூட்டாண்மை தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, யுனைடெட் கிங்டம்- ல் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலக கோப்பை 2023 உட்பட 2023-ம் ஆண்டின் இறுதி வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய ஆண்கள் மற்றும் பெண்கள் ஐசிசி சர்வதேசிய நிகழ்வுகளுக்கு பாலிகேப்பின் ஸ்பான்சர்ஷிப்பை உள்ளடக்கும்.

தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி

பாலிகேப் இந்தியா லிமிடெட் -இன் தலைவர் மற்றும் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி நிலேஷ் மலானி கூறுகையில், “60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்புடன் புகழ்பெற்ற உள்நாட்டு பிராண்டான பாலிகேப், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கூட்டா ளியாக இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது” என்றார்.

ஐசிசியின் தலைமை வர்த்தக அதிகாரி அனுராக் தஹியா கூறுகையில், 2023-ம் ஆண்டு இறுதி வரை ஐசிசி நிகழ்வுகளுக்கு பாலிகேப் அதிகாரப்பூர்வ கூட்டாளராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்

விளையாட்டை அதிக ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்ற எங்கள் பார்வையை நாங்கள் வழங்கும்போது, வரவிருக்கும் நிகழ்வுகளில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img