கோவை ஆர்.எஸ். புரம், டி.பி. ரோட்டில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி புதிய கண் மருத்துவமனையை நடிகை ராதிகா சரத்குமார் திறந்து வைத்தார்
விழாவில் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் ஏ.கே ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் கே.ஜி.ப க்தவச்சலம், அன்னபூர்ணா குரூப் நிறுவனங்களின் தலைவர் மணி, நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், வேதநாயகம் மருத்துவமனை டாக்டர் கந்தசாமி, வழக்கறிஞர்கள் நாகசுப்பிரம ணியன், சுந்தரவடிவேலு, மகாவீர்ஸ் டெக்ஸ்டைல்ஸ் தலைவர் பால்சந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே. ஸ்ரீதரன் வரவேற்று பேசியதாவது:
கேரளாவில் புகழ்பெற்ற டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை, கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு, திருச்சூர், ஆலத்தூர், திரூர் மற்றும் நெம்மாரா ஆகிய இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. கண்களை கவனிப்பதில் நிபுணத்துவம், தொழில் அனுபவமிக்க பணியாளர்கள், அன்பும், கருணையுடனும், கடமையாற்றுவோம் என்ற 3 தாரக மந்திரங்களோடு டிரினிட்டி மருத்துவமனை செயல்படுகிறது. கண் பிரச்னைக்கு உலகில் உள்ள தீர்வுகளை கேரளாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மூன்று மருத்துவ துறை நிபுணர்களின் நோக்கமாக டிரினிட்டி துவக்கப்பட்டது.
‘கோவையில் சினிமா துறைக்கு உள் கட்டமைப்பு’ விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசியதாவது: இணையத்தில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து கண் தானம், உடல் உறுப்பு தானம் போன்ற நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திரைப்படங்களில் சிகரெட் பிடித்தல் காட்சிகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசு கூறும் அறிவுரைகள் பின்பற்றப்படுகிறது.
கோவையில் சினிமா துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். திரைப்படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தற்போது குறைவாக இல்லை. அந்த காலத்தில் தொடாமல் பேசினர். இப்போது காலத்திற்கு ஏற்ப அந்த நிலை மாறியுள்ளது.
இப்போது வரும் வித்தியாசமான கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ஆன்லைன் விமர்சகர்கள் வந்துள்ளனர். அவர்களை தவிர்க்க முடியாது. அவர்கள் அதை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் மிருதுளா சுனில்
இதன் இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் மிருதுளா சுனில் ஆகியோர் இந்த மருத்துவமனைக்கு வலு சேர்த்துள்ளனர்.
தற்காலத்தில் மனிதர்களுக்கு கண்நலக் கோளாறுகளுக்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் மொபைல் போன்களும், கணினியின் ஒளித்திரைகளின் அதீதப் பயன்பாடும் தான். பிஞ்சுக் குழந்தைகளின் கைகளிலும் மொபைல் டச்போன் உள்ளது.
இது ஆபத்தான போக்கு. டிரினிட்டி கண் மருத்துவமனை சார்பில், கோவையில் 25 கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்துக்குள் இருக்கும் முதியோர்களுக்கு, வீடுதேடி சென்று கண் சிகிச்சை வழங்க உள்ளோம்.
மாதந்தோறும் 14 வயதுக்கு உட்பட்ட, 500 பள்ளிச் சிறார்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்க உள்ளோம். விரைவில் கோவையில் கண் வங்கியை திறக்கவுள்ளோம்.
நீரிழிவு நோயாளிகள் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசே £தனையைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். டயபடிக் ரெடினோபதி எனும் விழித்திரை ரத்த நாள பாதிப்பு நோய், அறிகுறிகள் வெளித்தெரியாமலேயே முற்றிலும் பார்வை இழப்பு நேரிடும். இதை ‘ஸ்டீலின் விஷன்’ என்பார்கள்.
இருபது ஆண்டு களுக்கும் மேலாக நீரிழிவு நோய்க் கோளாறு உள்ளவர்கள், ரத்தத்தில் குளுகோஸ் கட்டுப்பாடு இல்லாதவர்களின் விழித்திரை ரத்த நாளங்கள், குளுகோஸ் வண்டலால் சிதைவுறும்.
ஆக்ஸிஜனும் தடையாகும் என்பதால் முற்றிலும் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகும். மேற்படி ஆபத்து நேராமல் இருக்க, நீரிழிவு நோயாளிகள் பார்வை லேசாக மங்கினாலே கண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படவேண்டும்.
தமிழகத்தில் தனது முதல் கிளையை கோவை ஆர்.எஸ். புரம், டி.பி. ரோட்டில் (தபால் அலுவலகம் அருகே) துவக்கப்பட்டுள்ளது. கண்களில் ஏற்படும் பிரச் னைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த உயர்தர சிறப்பு தீர்வுகளை தரும் மருத்துவமனையாக இது திகழும்.
டிரினிட்டி பல்வேறு தேசிய நிறுவனங்களுடனும், முன்னணி மருத்து வ காப்பீட்டு திட்டங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நகரில் முதியோருக்கான சேவையையும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், மருத்துவ இயக்குநர் கார்னியா, கேட்ராக்ட், ரெப்ராக்டிவ் சர்ஜன் டாக்டர் முகமது சபாஜ், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ, தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.