fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மாநில அளவிலான எறிபந்து போட்டி: திருவள்ளூர் வீராங்கனைகள் முதலிடம்- இரண்டாம் இடத்தைப் பிடித்த கோவை

கோவையில் மாநில அளவிலான எறிபந்து போட்டி: திருவள்ளூர் வீராங்கனைகள் முதலிடம்- இரண்டாம் இடத்தைப் பிடித்த கோவை

தமிழ்நாடு எறிபந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட யுனீக் எறிபந்து கழகம் இணைந்து நடத்தும் 21வது மாநில அளவிலான எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 4 நாட்கள் கோவை வரதரா ஜபுரம் தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவிற்கு இந்திய எறிபந்து பெடரேஷன் பொருளாளர் டி.பாலவிநாயகம் தலைமை தாங்கினார்.

போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஓய்வுபெற்ற கஸ்டம்ஸ் துணை கமிஷனரும் fistball பெடரேஷன் மூத்த துணைத் தலைவருமான எம்.அழகேசன், மாவட்ட விளையாட்டுக் கல்வி ஆய்வாளர் டாக்டர் எம்.குமரரேசன், டி.என்.ஜி.ஆர். நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் கோவை மாவட்ட யூனிக் எறிபந்து கழக ஆலோசகருமான ஜி.சதாசிவன், ரத்தினம் குரூப் நிறுவங்களின் தலைமை நிர்வாக அலுவலரும் செயலாளருமான டாக்டர் ஆர்.மாணிக்கம், ஜே.ஆர்.டி ரியல்டோர்ஸ் சேர்மன் டாக்டர் ஜே.ராஜேந்திரன், பெரியநாயகி அம்மன் மெட்ரிக் பள்ளி தாளாளரும் யூனிக் எறிபந்து கழக துணைத்தலைவருமான சி.மோகன் ராஜ், லயன் பி.எஸ்.செல்வராஜ், திமுக மாவட்ட இளைஞரணி சிங்கை எஸ்.மதன், டிஎன்டிபிஏ பொதுச்செயலாளர் எஸ்.ராஜா, ஸ்ரீரேணுகா ஹைடெக் பிரிக்ஸ் மேனேஜிங் பார்ட்னர் லயன் டி.கோபால கிருஷ்ணன், உதவி பேராசிரியர் டாக்டர் டி.யுவராஜா, தி சென்னை ஆப்டிக்கல்ஸ் சிஇஒ ஆர்.ஆர்.கௌரிசங்கர், பொள்ளாச்சி ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே.கீர்த்திகிரி அனந்த கணேசன், முத்தை யா தியாகராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் விபரம்:
ஆண்கள் பிரிவு:

  1. செங்கல்பட்டு மாவட்டம், 2. சென்னை மாவட்டம், 3. தூத்துக்குடி மாவட்டம், 4. கரூர் மாவட்டம்.
    பெண்கள் பிரிவு:
  2. திருவள்ளூர் மாவட்டம், 2. கோவை மாவட்டம், 3. செங்கல்பட்டு
    மாவட்டம், 4. சென்னை மாவட்டம்.
    நிறைவுநாள் அன்று நடந்த பரிசளிப்பு விழாவுக்கு எறிபந்து பெடரேசன் பொருளாளர் டி.பாலவிநாயகம் தலைமை தாங்கினார். பெடசேரன் மூத்த துணை தலைவர் எம்.அழகேசன் யூனிக் எறிபந்து கழக ஆலோசகர் ஜி.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் ந.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) போட்டிகளில்
    வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
    விழாவில் மாநகர் மாவட்ட திமுக துணை செயலாளர் தளபதி இளங்கோ, கவுன்சிலர் சிங்கை எம்.சிவா, சிங்கை எஸ்.மதன், சி.கே.அருண்பாண்டியர், எம்.அழகிரிசாமி, எஸ்.ராஜா, ஜி.எம்.ஜெயபாலன், வி.என்.விஜயகுமார், டாக்டர். ஆர்.சுமதி, எஸ்.கவு சல்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img