கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் காளப்பட்டி, அரசினர் மாணவர் தங்கும் விடுதி பகுதியில் தனியார் அமைப்பின் பங்களிப்புடன் கூடு என்ற தன்னார்வ அமைப்பினர் சார்பாக நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் மரம் நடுதல் திட்டம் துவக்க விழாவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் துவக்கி வைத்து, பொது இடங்களில் சுமார் 5500 மரக்கன்றுகள் நடும் பணியை பார்வையிட்டார்.
உடன் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.