fbpx
Homeபிற செய்திகள்கோவை: மரக்கன்றுகள் நடும் பணி

கோவை: மரக்கன்றுகள் நடும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குறிச்சி குளம் உபரிநீர் வாய்க்கால் இருபுறமும் மாநகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, ZF WIND POWER COIMBATORE Pvt Ltd மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மியாவாக்கி அடர்வனம் திட்டத்தின்கீழ் 1500 மரக்கன்றுகள் நடும் பணியினை கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் மரக்கன்று நட்டுவைத்து பணியை தொடங்கி வைத்தனர்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், மண்டல தலைவர்கள் தனலட்சுமி, கதிர்வேல், பொது சுகாதாரகுழுத்தலைவர் மாரிச்செல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், பாபு, இளஞ்சேகரன், செந்தில்குமார், உதவி ஆணையர் அண்ணாதுரை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மணிகண்டன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img