கோயமுத்தூர் வடக்கு வட்ட மேசை 20 அமைப்பு, கோயம்புத்தூர் வடக்கு மகளிர் வட்டம் 11 ஆகிய அமைப்புகள் இணைந்து வரப்பட்டி பஞ்சாயத்து, சுல்தான்பேட்டையில் மியாவாக்கி வனப்பகுதியை உருவாக் கும் நோக்கில் கடந்த 26-ம் தேதி 3,500 மரக்கன்றுகளை நட்டனர்.
மியாவாக்கி காடு என்பது சிறிய பரப்பளவில் அதிக மரங்களை நடுவது. இது ஜப்பானிய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம். வரப்பட்டி பஞ்சாயத்து சார்பில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.
பல்லடத்தில் உள்ள ஃபேப்டெக் இன்டர்நேஷனல் ஹோஸீரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இந்த மரக்கன்றுகள் பராமரிக் கப்பட உள்ளன.