கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் புதிய பயனாளிகளாக தேர்ந் தெடுக்கப்பட்ட 20,416 மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.
இல்லறப் பொறுப்புகளுடன் பல்வேறு பணிகளை செய்து, அதன் மூலம் தங்களுடைய குடும்பத்தில் உள்ள நபர்களுக் கெல்லாம் பணி செய்து, அந்த குடும்பத்தின் உயர்வுக்கு உழைத்து கொண்டிருக்கக்கூடிய மகளிர் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு அதற்குரிய மரியாதையை தரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.9.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கேவை மாவட்டம், மதுக்கரை வட்டாரம், சீரப்பாளையத்தி லுள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.09.2023 நடைபெற்ற நிகழ்ச் சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர்க ளுக்கு மாதந்தோறும் ரூ.1000ம் பெறு வதற்கான ரூபே அட்டைகளை வழங்கினார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முகாம் களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட 7.35 இலட்சம் புதிய பய னாளிகளுக்கு 10.11.2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- உரிமைத் தொகை பெறும் வகையில் முதலமைச்சர், மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கியதை தொடர்ந்து, கோவை கொடி சியாவில் 10.11.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பயனாளிகளாக தேர்ந் தெடுக் கப்பட்ட மகளிருக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு, மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000ம் பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் இத்திட்டத் தின் கீழ் 1 கோடியே 14 இலட்சம் மகளிர் பயன்பெறுகிறார்கள். கோவை மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 4,40,346 மகளிருக்கு மாதந் தோறும் ரூ.1000 வழங் கப்பட்டு வருகின்றது.
மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர் கள் குறித்து அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ததின் அடிப்படையில், தற்போது புதியதாக 20,416 மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் இந்த மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத் தின் மூலம் கோவை மாவட்டத்தில் மொத்தம் 4,60,762 மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி சரண்யா தெரிவித்ததாவது:
நான் சூலூர் வட்டம், காடாம்பாடி கிராமம், செங்கத்துறை, மேற்கு வீதி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். கடந்த சில வருடங்களாக எனது கணவருக்கு சரியான வேலை இல்லாமல் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்து வந்தது.
தினசரி வருமானம் மிகவும் குறைவாக இருந்தது. எங்கள் குழந்தைகளுக்கு சரியான உணவு கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கலைஞர் உரிமைத் திட்டம் குறித்து அறிந்து எங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையின் வாயிலாக நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்தேன்.
இந்நிலையில் என்னுடைய விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக எனக்கு குறுஞ்செய்தி வந்தது.
தற்போது இத்திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம்முதல், பயனாளியாக தேர்வுசெய்யப்பட்டு, ரூ.1000 என்னுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது தற்போது நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் என்னுடைய குடும்பத்திற்கும், எங்கள் குழந்தைகளின் படிப்பு செலவிற்கும் இந்த தொகை மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.
எனவே, இத்திட்டத்தின் மூலம் எங்கள் இருண்ட வாழ்விலிருந்து எங்களை காப்பாற்றி, எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தின் கீழ் பயனடைந்த பயனாளி கண்ணம்மாள் தெரிவித்ததாவது: நான் சூலூர் வட்டம், காடாம்பாடி கிராமம், செங்கத்துறை, மேற்கு வீதி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு வயது 60 ஆகிறது. எனது கணவர் பெயர் முருகேசன். அவரால் எந்த வேலையும் செய்ய இயலாது.
அவரை பார்த்துக்கொண்டு நான் வீட்டில் இருந்துவருகிறேன். எனது 3 மகள்களும் திருமணமாகி வேறு ஊரில் வசித்து வருகின்றனர். எங்களுக்கு வேறு எந்தவொரு ஆதரவும் இல்லை. வயதான காலத்தில் எந்தவொரு வருமானமும் இல்லாமல் இருவரும் வறுமையில் வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கலை ஞர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண் ணப்பித்தேன். அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு, ரூ.1000 என்னுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை எங்கள் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவசிய தேவைக்கு யாரிடம் எதிர்பார்க்காமல், அத்தியாவசிய செலவு மற்றும் எங்களது மருத்துவ செலவிற்கும் இத்தொகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னைபோன்ற ஏழை பெண்களின் வாழ்விற்கு உதவியாக இருக்கும் இச்சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மகளிர் சார்பாக என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
கி.மோகன்ராஜ்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),
கோவை மாவட்டம்.



