தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணியமைப்பு, குற்ற வழக்குகள் தொடர்பான வழக்குகள் மற்றும் மேல் முறையீடுகளில் வரைவு வாதுரை, எதிர்வாதுரை தயார் செய்வதற்கு உதவியாக ஒரு சட்ட அலுவலர் பணியிடம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே அந்த பதவிக்கு கீழ்கண்ட விதிகளின் தகுதி உள்ளவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். நியமனம் செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.20,000/- தொகுப்பு ஊதியம் மட்டும் வழங்கப்படும் பிற படிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. அலுவலராக பணி நியமனம் செய்யப்படுபவர் அங்கீகரிக்கப் பட்ட பல்கலை கழகத்தில் பி.எல். சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அல்லது 5 வருட ஒருங்கிணைந்த சட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனது சட்ட படிப்பினை தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மேலும் 5 வருடம் உயர் நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் பணியமைப்பு, குற்றம் தொடர்பான வழக்குகளில் வாதாடியிருக்கவேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர் எந்த குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்க கூடாது. சட்ட அலுவலர் பணியிடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும்.
எனவே தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்ப மனு மற்றும் சுய விபரத்துடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகிற 4.-12.-2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



