Homeபிற செய்திகள்35 மலைவாழ் மக்களுக்கு தார்ப்பாய்கள், ஏழைகளுக்கு தையல் இயந்திரம், உதவித்தொகை- பாரத ஸ்டேட் வங்கி தொழிற்சங்கம்...

35 மலைவாழ் மக்களுக்கு தார்ப்பாய்கள், ஏழைகளுக்கு தையல் இயந்திரம், உதவித்தொகை- பாரத ஸ்டேட் வங்கி தொழிற்சங்கம் வழங்கியது

ஆனைமலை மலை வாழ் மக்கள் 35 பேருக்கு தார்ப்பாய்கள் மற்றும் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், கல்வி உதவித் தொகையை பாரத ஸ்டேட் வங்கியின் 78ம்ஆண்டு தொழிற்சங்க நினைவு தினத்தை முன் னிட்டு எஸ்.பி எஸ்.யூ தொழிற்சங்கம் வழங்கியது.

பாரத ஸ்டேட் வங்கியின் 78ம்ஆண்டு தொழிற்சங்க நினைவு தினத்தை முன்னிட்டு எஸ்.பி எஸ்.யூ (சென்னை வட்டம்) தொழிற்சங்க தலைவர் ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் கிருபாகரன் ஆகியோரின் வழி காட்டுதலின்படி SBSU CARES சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு உதவி செய்யும் வகையில் சமூக நலத்திட்ட உதவி வழங்கும் விழா வங்கியின் நிர்வாக அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்த விழாவில் ஆனைமலை ஊராட்சியில் வாழும் 35 மலைவாழ் மக்கள் வாழும் குடிசை வீடுகளில் மழை காலங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை போக்கும் வகையில் அவர்களுக்கு உதவும் விதத்தில் தரமான தார்பாய்கள் வழங்கப்பட்டது. அவற்றை சமூக ஆர்வலர் ஆனந்த் தீர்த்தன் பெற்றுக் கொண்டார்.

அதேபோல கோவை கீரணத்தம் பகுதியில் கணவனை இழந்து வாடும் மாலா என்ற பெண்ணுக்கு உஷா தையல் இயந்திரம் மற்றும் பெற்றோரை இழந்து படிக்க சிரமப் பட்டு கொண்டு இருக்கும் மாணவன் ஆண்டோ இன்ஃபன்ட்டிற்கு கல்வி உதவி தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன,

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மண்டல பாரத ஸ்டேட் வங்கியின் தொழிற்சங்க துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயச்சந்தர், துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார், சைலேஷ், உதவி பொதுச் செயலாளர்கள் சக்திவேல், ஜெயச்சந்திரன் மற்றும் அபிமன்யு ஆகியோர் தலைமை தாங்கினர். துணை பொதுச் செயலாளர் சைலேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் ஸ்ரீஜா, முதன்மை மேலாளர் (மனித வளம்) அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்த நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் சூரிய நாராயணன், ரகுநாதன், வேணுகோபால், பழனி சாமி, பத்மநாபன், செல்வராஜ் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி இளம் தலைமுறை ஊழியர்களை ஊக்குவித்தார்கள்.

நிறைவாக துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயச்சந்தர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img