fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

திருப்பூரில் இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

திருப்பூர் அனுப்பர்பாளையத்திலுள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் “இலவச ஜூட் (சணல்)  பொருட்கள் தயாரித்தல் பயிற்சி” நடைபெற உள்ளது.

13 நாள் முழு நேரப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

பயிற்சிக்கான நேர்காணல் 02.05.2024 அன்று நடைபெற உள்ளது. எழுத படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண்  இருவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். 

பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். 

பயிற்சிக்கு விண்ணப்பிக்க “கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவினாசி சாலை , அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு  9489043923, 9952518441, 8610533436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை, பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ் குமார்  தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img