தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து மீன் கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வரத்து குறைந்து மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கடைகளில் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
நாகப்பட்டினம் காரைக்கால் தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதியில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சாதாரண நாட்களில் 30 டன் முதல் 40 டன்கள் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் இன்று ஈரோடு மீன் மார்க் கெட்டுக்கு கேரளாவில் இருந்து மட்டும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இன்று வரும் 15 டன்கள் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இது மட்டுமின்றி தற்போது பறவை காய்ச்சல் பீதி காரணமாக பொதுமக்கள் கோழி இறைச்சிகளை சாப்பிடுவதை குறைத்து கொண்டனர். அதற்கு பதிலாக தற்போது அவர்களின் கவனம் மீன் பக்கம் திரும்பி உள்ளது. குறைந்த அளவே மீன்கள் விற்பனைக்கு வந்ததால் கடந்த வாரத்தை பெரிய மீன் களின் விலை ரூ. 150 வரை, சின்ன மீன்களின் விலை ரூ.50 வரை உயர்ந்தது.