கோவை துடியலூர் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 31வது ஆண்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக, பின்னணி பாடகர் சத்யபிரகாஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து தரவு வெளியீட்டு விழா நடைபெற்றது. பின்னர் கல்லூரியின் விழா மலரை சிறப்பு விருந்தினர் வெளியிட நிர்வாக அறங்காவலர் பெற்றுக்கொண்டார்.
இதில் சிறந்த மாணவர் விருது எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையை சார்ந்த கோகுல்நாதன் என்ற மாணவருக்கும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் இன்ஜினியரிங் துறையை சார்ந்த நந்தனா என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இறுதியில் துணை முதல்வர் கருப்புசாமி நன்றி கூறினார்.



