கோவை சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் Youth Festival – 2025 நடை பெற்றது. இதனையொட்டி சிஎஸ்ஐ கோவை திரு மண்டல வாலிபர்கள் அளவிலான கிரிக்கெட் போட்டி கார்மல் கார்டன் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. 16க்கும் மேற்பட்ட திருச்சபையின் அணிகள் பங்கு பெற்றன.
போட்டியினை திருச் சபையின் ஆயத்தலைவர் ராஜேந்திரகுமார் ஜெபத் தோடு துவங்கி வைத்தார்.
ஆலய பொருளாளர். காட்வின் கோயில், திருமண்டல பேரவை உறுப்பினர் பரமானந்தம், ஜேக்கப், ஜாஸ்மின் ஜாக்சன், நிர்வாக குழு உறுப்பினர் அருண் ஆனந்தராஜ், வெர் ஜினிய அருண், பிரசாந்த் ராஜ்குமார், அடம் அப்பா துரை, ஆல்வின், ஜெபகிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் ஆலாந்துறை சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலய அணி முதல் முதல் பரிசு பெற்றது.
சிஎஸ்ஐ செயின்ட் பால்ஸ் திருப்பூர் அணி இரண்டாவது பரிசினை பெற்றது.