கோவை ஆர்எஸ் புரம் கலையரங்கத்தில் திராவிட இயக்கத்
தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி மாநில மாநாடு நடந்தது.
திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் சுப.வீர பாண்டியன் தலைமையில் இரண்டு நாட்கள் நடை பெறும் இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் சுயமரியாதை தொடர்பாக பெரியார் முன்னெடுத்த செயல்பாடுகள் மற்றும் பெரியார் வழியில் வந்த இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றது.
இந்த கருத்தரங்கத்தில், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசினார்.
இதைத்தொடர்ந்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் இயக்கங்களை சார்ந்த கொளத்தூர் மணி, கு.இராமகிருஷ்ணன், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேரணி மற்றும் பறை இசை கச்சேரி நடந்தது.
இந்த மாநாட்டின் நிறைவாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கழக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.



