கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம், டாக்டர் சசிகலா மருத்துவமனை சார்பில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், அவர்தம் குடும்பத்திற்கு இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது.
முகாமை 324சி மாவட்ட ஆளுநர் ஜெயசேகரன் துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம் கலந்து கொண்டார்.
ஏற்பாடுகளை ஸ்பின் சிட்டி அரிமா சங்க தலைவர் இன்ஜினியர் ஸ்ரீதர், செயலாளர்கள் தங்கராஜ், கணேசன், பொருளாளர் ஜெகதீசன், ஆனந்தன், கிரிஜா, வக்க்ல் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மருத்துவர்கள் சதீஷ்சேகர் , இந்துமதி, விக்னேஷ்வர் கலையரசி ஆகியோர் சர்க்கரை, கொலஸ்ட்ரால் இசிஜி, தைராய்டு ஆகியவை பரிசோதித்து மருந்துகள் வழங்கினர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கான உணவுக்கான மளிகைக் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
பாண்டிச்சேரி, சென்னை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி,
திருச்சி, சேலம், திருப்பூர், கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கிருபையின் வெளிச்சம் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி மகேந்திரன் ஒருங்கிணைத்திருந்தார்.