fbpx
Homeபிற செய்திகள்கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கோவை வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் அம்பாள் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவரின் உத்தரவின் படி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலோடு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக மாநில பொறியாளர் அணி சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி கோவை வடக்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவிநாசி, மேட்டுப்பாளையம் தொகுதிகளில் உள்ள 30 பொறியியல் மற்றும் 10 ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தகுதிச் சுற்று போட்டி வரும் 13-ம் தேதி சரவணம்பட்டி, காபி கடை ஸ்டாப் அருகில் உள்ள பி.பி.ஜி.கல்லூரியில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.

நிகழ்வினை முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநில பொறியாளர் அணி தலைவர் கு.கருணாநிதி, மாநில துணைச் செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

இதில் வெற்றிபெறும் மாணவர் களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.5 ஆயிரம், 3-வது பரிசு ரூ3 ஆயிரம் என ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். இதன் மூலம் தனியார் டி.வி. சேனல்களில் நடக்கும் பட்டிமன்றங்களில் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த கட்ட மாக இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இறுதிச்சுற்றில் முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 2 லட்சமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட இருக்கிறது.
கோவை வடக்கு மாவட்ட பகு தியில் உள்ள பொறியியல் மற்றும் ஐடிஐ

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

படிக்க வேண்டும்

spot_img