கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் சார்பில் கோவை மாநகரின் முக்கிய பிரச்சினைகள் கண்டறியும் நோக்கில்“Reimagining Our City Scape” என்ற தலைப்பில் கட்டிடக்கலை கல்லூரிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டியில் சசி கட்டிடக்கலை ஆக்கப்பள்ளி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அணி முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற இளம் கட்டிட கலைஞர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கியபோது எடுத்தபடம்.