கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழு மற்றும் உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (போளூர்), ராமச்சந்திரன் (தளி), ஈஸ்வரன் (திருச்செங்கோடு), சரஸ்வதி (மொடக்குறிச்சி), மதியழகன் (பர்கூர்), அம்மன் அர்ச்சுணன் (கோவை வடக்கு) சட்டப்பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை ஆகியோர் உள்ளனர்.