fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ நாகசாயி மந்திர்: சாயிபாபா கோவிலில் பிப்.1ம் தேதி கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் தீவிரம்

கோவை ஸ்ரீ நாகசாயி மந்திர்: சாயிபாபா கோவிலில் பிப்.1ம் தேதி கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் தீவிரம்

கோவை, ஸ்ரீ நாகசாயி மந்திர் சாயிபாபா திருக் கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணை தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.பாலசுப் பிரமணியன், பொருளாளர் டாக்டர் சர்வோத்தம், அறங்காவலர்கள் தியாக ராஜன், சந்திரசேகர், சுகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது
ஸ்ரீ நாகசாயி அறக் கட்டளை 1943ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்டது.

ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயி பாபா திருக்கோயில்) சாயிபாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி (அரசு உதவிபெறும் பள்ளி), சாயிதீப் திருமண மண்டபம், இலவச ஹோமியோபதி கிளினிக், மற்றும் மருத்துவ உதவி, கல்வி உதவித் தொகை ஆகியவை பொது மக்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றோம்.

சாயிபாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி 1946ம் ஆண்டு தொடங்கப்பட் டது. இன்று வரை கட்டணமில்லாத தரமான கல்வியை அளித்து வருகிறோம். தென்னிந்தியாவின் முதல் ஷீரடி சாயிபாபா திருக்கோயில், கோவை ஸ்ரீ நாகசாயி மந்திர் ஆகும்.

மகா கும்பாபிஷேகம்

முதல் மகா கும்பாபிஷேகம் 10-10-1946 அன்று நடைபெற்றது.
ஸ்ரீ நாகசாயி மூலவர் சிலையானது உலகிலேயே இரண்டாவது பளிங்குக் கல்லால் உருவாக்கப்பட்டதாகும்.

ஸ்ரீ நாகசாயி மந்திர் சாயிபாபா கோவில் கோவை மாநகரத்தின் வரலாற்று சின் னங்களில் ஒன்றாகும். ஸ்ரீ நாகசாயி மந்திர் தரிசனத்திற்கு உள்ளுர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின் றனர்.

ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயிபாபா திருக்கோயில்) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 20 ஆண் டுகளுக்குப் பிறகு, வருகின்ற 1&02&2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடை பெறவிருக்கின்றது. 28 ஜனவரி 2023 முதல் யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img