fbpx
Homeபிற செய்திகள்சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்துநீலகிரியில் திடக்கழிவு மேலாண்மைக்காகரூ.60 லட்சம் நிதி வழங்கிய ஸ்டேட் வங்கிரோட்டரி சங்க...

சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்துநீலகிரியில் திடக்கழிவு மேலாண்மைக்காகரூ.60 லட்சம் நிதி வழங்கிய ஸ்டேட் வங்கிரோட்டரி சங்க திட்டத்திற்கு ரூ.99.40 லட்சம்

சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு சமூக நலப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் இரண்டு முக்கிய சமூக முன்னெடுப்புகளுக்கு வங்கியின் தலைவர் சல்லா ஸ்ரீனிவாசலு செட்டி பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) ஆதரவை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இந்த நிதியுதவி வழங்கும் விழா உதகையில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, மாவட்ட நிர்வாகத்திற்கு டிஆர்டிஏ மூலம் ரூ.60 லட்சம் சிஎஸ்ஆர் பங்களிப்பு வழங்கப்பட்டது. அந்தப் பங்களிப்பு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் (டிஆர்டிஏ) அபிலாஷா கவுர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலையான சமூக மேம்பாட்டை ஊக்குவிப்பதில் பொது நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வரவேற்று பாராட்டினர்.

மற்றொரு முக்கிய பெருநிறுவன சமூகப் பொறுப்பு முன்னெடுப்பாக, சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப் அறக்கட்டளை மூலம் முக்கிய பொது இடங்களில் தானியங்கி வெளிப்புற இதயத் துடிப்பு சீராக்கிகளை (AEDs) நிறுவுவதற்காக, பாரத ஸ்டேட் வங்கி ரூ.99.40 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. அவசர இதயப் பராமரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், சரியான நேரத்தில் உயிர்காப்பதைச் சாத்தியமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நன்கொடையை, ரோட்டரி அறக்கட்டளையின் தலைவரும், சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப் அறக்கட்டளையின் அறங்காவலருமான சி.கிருஷ்ணசந்தர் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப்பொது மேலாளர் விவேகானந்த் சௌபே, பொது மேலாளர்ஹரிதா பூர்ணிமா, துணைப் பொது மேலாளர் எஸ்.எல்.அருண் மற்றும் பிராந்திய மேலாளர் சி.ஜவஹர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதில் வங்கியின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வு, நிலையான சமூக மேம்பாடு மற்றும் பொது நல முன்னெடுப்புகள் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதில் பாரத ஸ்டேட் வங்கியின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அதன் தொடர்ச்சியான பெருநிறுவன சமூகப் பொறுப்புப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img