மேம்பட்ட, நவீன உற்பத்தி தொழில் நுட்பத் தீர்வுகள் வழங்கல் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான பாரத் ஃபிரிட்ஸ் வெர்னர் (BFW), தமிழ் நாட்டின் ஓசூரில் புதிய மிக நவீன தொழி லகத்தை நிறுவுகிறது.
இதன் மூலம் நடப்பு வருடாந்திர உற்பத்தி அளவான 3000 mcs லிருந்து, 10,000 mcs ஆக மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் 60000 சதுரமீட்டர் பரப்பளவுள்ள கட்டிடங்களை கொண்ட உற்பத்தி ஆலையில் மூன்று கட்டங்களில் கணிசமான முதலீட்டைச் செய்ய இந் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
பெங்களூரு இன்டர்நேஷனல் எக்ஸிபிஷன் சென்டரில் (BIEC) மெஷின் டூல்கள் மற்றும் உற்பத்தி தொழில கங்கள் மீது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வாக தற்போது நடைபெற்று வரும் IMTEX 2023-ல் இந்த விரிவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னேற்றம் மற்றும் ஆதரவளிக்கும் நிலைப்புத்தன்மை முன்னெடுப்புகளின் ஓர் அங்கமாக, கார்பன் உமிழ்வே இல்லாத அசெம்பிளி தொழிலகமாக BFW -ன் இந்த ஆலை நிறுவப்படும்.
APAC என அழைக்கப்படும் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் இத்தகைய மிகப் பெரிய அளவில் நிறுவப்படும் முதல் உற்பத்தி ஆலை என்ற பெருமையை இது கொண்டிருக்கும்.
பிஎஃப்டபிள்யூ இந்தியா நிறுவனம்
பிஎஃப்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி ராகவன் கூறியதாவது: திறன்மிக்க லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகளுக்காக ஓர் அமைவிடத்தின் கீழ் முக்கிய துணைப்பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் செயல்படுவதற்கான வசதியுடன் மிகப்பெரிய, ஒருங்கி ணைக்கப்பட்ட உற்பத்தி ஆலையை உரு வாக்குவது உத்தேசிக்கப்பட்டிருக்கும் இவ் வரைவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
உற்பத்தி அளவை மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்த்துகின்ற மற்றும் இதனோடு தொடர்புடைய தயாரிப்பு / செயல்முறை தொழில்நுட்ப திட்டத்தை ‘LEAP – BFW’ என்ற முனைப்புத்திட்டத்தின் வழியாக மேற்கொள்ளவிருக்கும் செய்தியினை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகளாவிய வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைப் பூர்த்திசெய்ய இந்த முன்னெடுப்பு முழுமையான ஆதரவை வழங்கும்.
விரிவாக்க செயல் திட்டத்தின் மூலம் கூடுதலாக 600 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் சாத்தியமாக்குவதற்கு எந்த தடைகளோ, வரம்புகளோ இல்லை என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.