fbpx
Homeபிற செய்திகள்கோவை கிழக்கு மண்டல அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள்

கோவை கிழக்கு மண்டல அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள்

தமிழ்நாடு மாநில விளையாட்டு கராத்தே சங்கம் மற்றும் இந்திய கராத்தே சங்கம் சார்பில் கோவை மாவட்டம் கிழக்கு கராத்தே சாம்பியன்ஷிப் 2023ம் ஆண்டிற்கான போட்டிகள் சூலூரில் உள்ள ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக தமிழ்நாடு மாநில விளையாட்டு கராத்தே சங்கம் தலைவர் மற்றும் இந்திய கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டைரக்டர் சென்சாய் சாய் ப்ரூஸ் கலந்துகொண்டு போட்டியை கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டத்தில் முதல்முறையாக 5 மண்டலங்களாக கராத்தே போட்டிகள் நடத்துகின்றோம். இதற்கு முக்கிய காரணம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பளித்து மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே, இந்த மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் எங்கள் சங்கம் சார்பில் நடத்தி வருகின்றோம்.

மேலும், அடிப்படையில் இருந்து மாணவர்களுக்கு போட்டிகள் கற்பிக்கப்பட்டு சர்வதேச அளவில் வெற்றி பெற செய்வது எங்களுடைய முக்கிய நோக்கமாகும். அதேபோல் ஆண்டிற்கு ஒரு முறை மாவட்ட அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும்.

இதனை முறையாக செய்வதன் மூலம் தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோர் இதற்கு ஊக்கமளித்து அதற்கான வாய்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

அதன் முயற்சி தான் இன்று முதல்முறையாக கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மண்டல போட்டிகளாக இந்த போட்டியை நாங்கள் நடத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.

கராத்தே சங்கம்

இதில் தமிழ்நாடு மாநில விளையாட்டு கராத்தே சங்கம் ஆர்.சி தலைவர் சென்சாய் அறிவழகன் முன்னிலை வகித்தார். டோர்னமெண்ட் டைரக்டர் சென்சாய் பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர்கள் சென்சாய் நாசர்தீன், சென்சாய் ராதிகா, சென்சாய் கிருஷ்ணசாமி, சென்சாய் சௌந்தரராஜன் சென்சாய் சாமுவேல் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில விளையாட்டு கராத்தே சங்கத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img