fbpx
Homeபிற செய்திகள்கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் 50 சதவீதம் தள்ளுபடி விற்பனை திருவிழா

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் 50 சதவீதம் தள்ளுபடி விற்பனை திருவிழா

கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் லுலு ஹைப்பர் மார்க்கெட், தனது மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு ‘பிளாட் 50% மெகா விற்பனை’ சலுகையை அறிவித்துள்ளது. ஜூன் 11 முதல் 14ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனை திருவிழாவில் பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் மூன்று ஆண்டுகால வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இந்த சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கூடுதல் நேர வசதியுடன் விற்பனை நடை பெற உள்ளது.

இதன் ஆண்டுவிழா நிகழ்ச்சி யில் மண்டல மேலாளர் மகே சன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன் மற்றும் சூப்பர் மார்க் கெட் மேலாளர் சின்னதுரை உள் ளிட் டோர் கலந்து கொண்டு விற் பனையை தொடங்கி வைத்தனர்.

இந்த மெகா விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன்கள், வீட்டு உபயோக மின் சாதனங்கள், தினசரி மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்க ளுக்கு சிறப்பு விலைகள் அறி விக்கப்பட்டுள்ளன. மேலும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் ஃபேஷன் பொருட்களும் ஆண்டுவிழா சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி குறைந்த விலையில் தேவையான பொருட் களை வாங்கிக் கொள்ளலாம் என லுலு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img