fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா

கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா

கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலய 60 வது ஆண்டு தேர்த் திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி அருட்பணி ஜோசப் டேவிட் தலை மையில் கொடியேற்றத்து டன் தொடங்கியது.

திருவிழாவில் அருட்பணி வல்சஸ், அருட்பணி ஜெரோம், அருட்பணி ஜோசப் தனராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை, நவநாள், ஆராதனை போன்ற வழிபாடுகள் நடைப்பெற்றது.

இறுதி நாளான நேற்று (ஞாயிற்று கிழமை) காலையில் கோவை மறைமாவட்ட ஆயர் லெ.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, குழந்தை களுக்கு புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல், அருட்சாத னம் வழங்குதல் நிகழ்வு நடைப்பெற்றது.

மாலையில் கோவை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் தேர்த் திருவிழா திருப்பலி நடைப்பெற்றது. இறுதியாக 60 வது ஆண்டு ஆடம்பர தேர்பவனி நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு இறையாசிர் பெற்றுக்கொண்டார்கள்.

இறுதியாக திவ்ய நற்கருணை ஆசிர் உடன் விழா நிறைவுபெற்றது.
இந்த விழாவுக்கான ஏற் பாடுகளை பங்குத் தந்தை அருட்பணி.ததேயுஸ் பால் ராஜ், உதவி பங்குத்தந்தை அருட்பணி.ரஞ்சித் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img