ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அண்மையில் ஒடிசா வின் புவனேஷ்வரில் உள்ள KIIT-ல் நடைபெற்ற CAHOTECH2025-ன் 10-வது பதிப்பில்“HCO Innovation & Early Technology Adoption Winner Award” என்ற விருதைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க விருதை, இந்தியாவின் மருத்துவமனைகளின் தரஉயர்வு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னணி இலாப நோக்கற்ற அமைப்பான CAHO வழங்கியது.

மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க.மாதேஸ்வரன், “மருத்துவத் துறையில் புதுமை மற்றும் மேம் பட்ட தொழில்நுட்பங்களை கொண்டு நோயாளிகளின் சிகிச்சை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதில் நாங்கள் செலுத்திவரும் அர்ப்பணிப்பை இந்த விருது வெளிப்படுத்துகிறது” என தெரி வித்தார்.
128 போட்டியாளர்கள் மற்றும் 21 இறுதிப் போட்டியாளர்களுக்கு எதிராக, பல சுற்று தீவிரமான விளக்கக்காட்சிகளுக்குப் பிறகு இந்த விருதைப் பெற்றது, நோயாளிகளின் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைக் கான அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ராயல் கேர் மருத்துவமனை மருத்துவ மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பைப் வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் மற்றும் தெற்காசிய துணைக்கண்டத்திலேயே MRgFUS சிகிச்சை முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் நடுக்குவாதம் ஆகியவற்றை சிகிச்சையளிப்பதில் ராயல் கேர் மருத்துவமனை ஒரு முக்கிய முன்னோடி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், “Magnetic Resonance Guided Focused Ultrasound (MRgFUS)” எனப்படும் இத்தொழில் நுட்பம் கத்தியின்றி செய்யப்படும் முதல் மூளை அறுவை சிகிச்சை முறையாகும் நடுக்க வாதம், கை நடுக்கம் மற்றும் பார்கின்சன் நோய்க்காக இந்த சிகிச்சை அளிக் கப் பயன்படுகிறது. இதுவரை 225 நோயாளிகள் இந்த முறையின் மூலம் வெற்றிகரமாக சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
டாக்டர் என்.செந்தில் குமார் (கதிரியக்க நிபுணர், ராயல் கேர் மருத்துவமனை) இந்த தொழில்நுட்பத்தை மாநாட்டில் விளக்கி, மருத்துவமனை சார்பில் விருதைப் பெற்றார்.



