கோவை ரோட்டரி டவுன் சங்கம் சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழில் நிறுவனங்களின் நேர் காணலை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றிய விளக்கக்கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் பிரகாஷ், செயலர் துரைமுருகன் ஆகியோர் முன்னணியில் நடைபெற்ற விழாவில் காக்னிஜண்ட் நிறுவன முன்னாள் இயக் குநர் சரவணக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் நேர்காணல் பற்றிய விவரங்களை மிக எளிய முறையில் எடுத்துரைத்தார்.
விழாவிற்கு கோவை அரசினர் &பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கினார்.
கோவை ரோட்டரி டவுன் சங்கத்துடன் இணைந்து கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், செயலர் சாந்தநரசிம்மன், பொருளாளர் ரமேஷ் மற்றும் பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தின் முடிவில் கருத்தினை பகிர்ந்து கொண்ட கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி ஹரிணி நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும், புதிய தகவல்களை தெரிந்து கொள்ள உதவியதாகவும் கூறினார்.