கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம், அண்ணா நகரில் மாநகராட்சி, ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சம்பத், உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.