கோவையில் செயற்கை புல்தரை கால்பந்து மைதானம் திறந்து வைக்கப் பட்டது.
உதவி கமிஷனர் எஸ்.கரிகால்பாரி சங்கர் இந்த மைதானத்தை திறந்து வைத்தார்.
கோவை சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில், ரத்தினம் கல்லூரி பின்புறம், இந்த மைதானம் அமைந்துள்ளது. துவக்க விழாவில் நடைபெற்ற போட்டியில் வென்றவர்களுக்கு உதவி கமிஷனர் பரிசுகளை வழங்கினார்.
அமைப்பாளர்கள் விக்னேஷ். அர்ஷத், சர்ஜூன், மனோஜ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.