கோவை வஉசி மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கோவை வ.உ.சி மைதா னத்தில் இன்று (26ம் தேதி) நடைபெற்ற குடியரசு தின விழாவில் காலை 8.05 மணிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ் ணன், மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் ஆர்.சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநா ராயணன், காவல்துறை துணை தலைவர் சி.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி சௌமியா ஆனந்த், மாநகர காவல் துணை ஆணையர்கள் மதிவாணன், சந்தீஸ்குமார், சுகாசினி, மாவட்ட ஆயுதப் படை காவல் துணை கண்காணிப்பாளர் என்.தென் னரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) எம்.கோகிலா, வருவாய் கோட் டாட்சியர் பண்டரிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளி ன் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் பொன்னாடை அணிவித்து மரியாதை செலு த்தினார். மேலும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
பின்னர், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு தமிழ்நாடு முத லமைச்சரின் காவலர் பதக்கங்கள் வழங்கும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையரகத்தின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு நிலையிலான 69 காவலர்களுக்கும், கோவை மாவட்ட காவல்துறையின் சார் பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு நிலையிலான 43 காவலர்களுக்கும் என மொத்தம் 112 பல்வேறு நிலையிலான காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், அவர் கள் வழங்கினார்.
மேலும், சிறப்பாக பணியாற்றிய 127 காவல்துறை அலுவலர்களுக்கும், மருத்துவர்கள், அரசு அலுவலர் கள், பணியாளர்கள், உள் ளிட்ட 136 நபர்கள் என மொத்தம் 263 நபர்களுக்கு நற் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சிகள்
பின்னர், பள்ளி மாணவ, -மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளான ஷாஜகான் நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் செவ்வியல் நடனமும், பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்வகை வாத்திய கருவி வாசிப்பு நிகழ்ச்சியும், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்களின் ஒயிலாட் டமும், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-, மாணவியர்களின் நாட்டுப்புற நடனமும், கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்களின் நாட்டுப்புற நடனமும் மற்றும் ஆழியாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்களின் பறை நடனமும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.அதனைத் தொடர் ந்து, சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் மேற்கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.