ரோட்டரி சங்கம் சார்பில் பச்சையப்பன் தொடக்கப் பள்ளியில்
வகுப்பு அறை முற்றிலும் சீர் செய்து வண்ணம் தீட்டப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு,சித்திரங்கள் வரையப்பட்டன. பள்ளியின் சுற்றுச்சுவர் சீர் செய்யப்பட்டது.
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு உண்ண தட்டுக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி யில் சங்கத் தலைவர் அரி தனராஜ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் அழகப்பன் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் கேதார் நாதன் புனரமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறையை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் மாணவர்களுக்கு உணவு உண்ணும் தட்டுகளை வழங்கினார்.
ரோட்டரி மாவட்டம் மண்டலம் 14-ன் துணை ஆளுநர் சுனில்குமார் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் சங்கத் தலைவர் கள் நடனசபாபதி, மெஹபூப் உசேன், நடராஜன், ரத்னசபேசன், பாபு, சக்திவேல் உறுப்பினர்கள் கனகவேல்,முகமது சாலி, பொருளாளர் நேசராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கச் செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.