கோயம்புத்தூர் ஸ்கால் கிளப், தென்னிந்திய ஹோட்டல்ஸ் மற்றும் ரெஸ்டாரென்ட் அசோசியேசன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆ கியவை இணைந்து நடத்திய, “உலக சுற்றுலா தினவிழா”, ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
கோயம்புத்தூர் ஸ்கால் கிளப் தலைவர் அருண்குமார் வரவேற் றார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்போது “இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்று. நாட்டின் பெ £ருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. கோவையில் அழகிய பகுதிகள் அதிகம் உள்ளன.
இவற்றைப் பார்க்க ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். சுற்றுலாப் பகுதிகளில் தூய்மையைக் கடைப்பிடித்தால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொருளாதாரமும் வளரும்.” என்றார்.
தொடர்ந்து கோவை மாநகரக் காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேசும்போது, “சுற்றுலா என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல. அது பாதுகாப்பும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக, சுற்றுலா போலீஸ் திட்டம் நீலகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை மாநகரிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் ” என்றார்.
பின்னர் கோயம்புத்தூர் ஸ்கால் கிளப்புடன், கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்த ஒரு லட்சம் விதைப்பந்துகளை அதன் தலைவர் அருண்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாரிடம் வழங்கினார்.
இவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் மூலமாக பல்வேறு பகுதிகளில் தூவப்பட உள்ளது. விழாவில், கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக் குமார், தென்னிந்திய ஹோட்டல்ஸ் மற்றும் ரெஸ்டாரென்ட் அசோசியேசன் தலைவர் சுந்தர் சிங்காரம், செயலர் முனைவர் பிரேம்கண்ணா, கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் கே.ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்கால் கிளப் துணைத் தலைவர் ரமேஷ் சந்திரகுமார் நன்றி கூறினார்.