fbpx
Homeபிற செய்திகள்காரமடை அருகே சுற்றித் திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்

காரமடை அருகே சுற்றித் திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணை பகுதியில் சுமார் 20க்கும் மேற் பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக பில்லூர் அணை அருகே உள்ள கோரபதி கிராமத்தில் ஒற்றை பெண் காட்டு யானை ஒன்று காலை மற்றும் மாலை நேரங்க ளில் கிராமப் பகுதிகளில் உலா வருகிறது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞரை யானை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஒற்றைப் பெண் காட்டு யானை ஒன்று இன்று காலை கோரபாதி கிராமத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் உலா வந்தது இதனால் பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்

மேலும் தொடர்ந்து காட்டு யானை இப்பகுதியில் சுற்றி வருவதால் மீண்டும் யானை பொதுமக்களை தாக்கக்கூடிய அபாயம் உள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட வனத்துறை மற்றும் காரமடை வனத்துறையினர் இந்த ஒற்றை பெண் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண் டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img