பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகம் சார்பில் ஸ்வாச்சதா ஹி சேவா என்ற தூய்மைப் பணி இயக்கத்தின் (ஸ்வாச்சோத்சவ்) தூய்மை விழா நடந்தது.
இதையொட்டி பீளமேடு ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணி, வங்கியின் வட்டாரத் தலைவர் கே.மீராபாய் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் முதன்மை விருந்தினராக சௌரிபாளையம் அத்வைத் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் பள்ளியின் செயலாளருமான கார்த்திகேயன் பங்கேற்றார்.
நிகழ்வில் ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் ரவிக்குமார், வங்கியின் அலுவலர்கள், பணியாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.



