பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் காங்கேயம் கிளை திறப்பு விழா நேற்று (செப்டம்பர் 25) ஆர்.எம். டவரில் நடந்தது. இதனை யுனைடெட் கார்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.ஜெயந்தன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
நிகழ்விற்கு போடரான் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் குமார் முன்னிலை வகிக்க, வங்கியின் கோவை மண்டல மேலாளர் எஸ்.என்.பாலாஜி, துணை மண்டல மேலாளர் ஆர்.ராஜூ மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.



