கோவை புலியகுளம் – சௌரிபாளையம் சாலை யில் உள்ள ஏரி மேடு அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பள்ளி கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்காக காலை நேரங்களில் இந்த சாலையை பயணிக்கும் பொதுமக்கள் சிரமத்துக்குள் ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக புலியகுளம் ஏரி மேடு இறக்கம் அருகே சாலையில் பல்வேறு பகுதிகள் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் புலியகுளம் சௌரிபாளையம் சாலை யில் ஏரிமேடு அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல குறுகிய சாலையான இதில் பேருந்துகளும் செல்வதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் நெரிசலில் காத்திருக்கின்றனர். இது அவசர காலங்களில் பொதுமக்களை சிரமத் துக்கு உள்ளாகிறது.
இந்த நிலையில் புலியகுளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். இதனை கோவை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.