கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் ரயில்வே /வங்கி/எஸ்.எஸ்.சி போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் கருணாகரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் வளர்மதி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் உலகி மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.