fbpx
Homeபிற செய்திகள்ரூ.740 கோடியில் குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணி: செய்தியாளர் பயணத்தில் கோவை ஆட்சியர் ஆய்வு

ரூ.740 கோடியில் குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணி: செய்தியாளர் பயணத்தில் கோவை ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோவை மாநகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்ட (பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட பில்லூர் -III) பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.
அவரது தலைமையில் செய் தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சியுடன், குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளும், 7 பேரூராட்சிகளும், ஓர் ஊராட்சியும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டது.

திட்டப் பணிகள்

இவ்வாறு விரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர் 3ம் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு ரூ.740 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டப் பணிகளானது நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் என 3 பிரிவுகளாக பிரித்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் பயன்பெறும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. தலைமை நீரேற்று நிலையம் பவானி ஆற்றை பில்லூர் அணையின் கீழ்புறம் நீராதாரமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இயல்பு நீருந்து குழாய், சுத்த நீருந்து குழாய் மற்றும் கிளை பிரதான நீருந்து குழாய் என மொத்தம் 90.76 கி.மீ நீளத்திற்கு அமைக்க உத்தேசித்து, 41.17 கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றது. குழாய்கள் அமைக்கும் பணிகள் 47% சதவிகிதம் முடிவுற்றுள்ளன

சுத்திகரிப்பு நிலைய பணிகள் 178.30எம்.எல்.டி அளவுக்கு வடிவமைக்கப்பட்டு 93 சதவிகித பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதை வடி வமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ளது. குழாய் கள் அமைக்கவும், பிரதான தரை மட்ட தொட்டி அமைக்கவும் 156 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இதில் 35.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகவும், 121 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந் தமானது. நில கையெடுப்பு பணிகள் அனைத்தும் முடித்து வெகு விரைவில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஏ.செந்தில் குமார், மேற்பார்வை பொறியாளர் ராஜி, நிர்வாக பொறியாளர் செல்லமுத்து, உதவி நிர்வாக பொறியாளர்கள் செந்தில்குமார், பட்டன், ராதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img