fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி சார்பில் அரசு துறையில் உயர் பதவி வகிக்கும் பெண்களுக்கு...

சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி சார்பில் அரசு துறையில் உயர் பதவி வகிக்கும் பெண்களுக்கு பாராட்டு

உலக மகளிர் தினத்தையொட்டி சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி சார்பில் பெண் அரசு அதிகாரிகள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் உலக முழுவதும் உள்ள பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக அரசுத் துறை பெண் அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக தகவல் தொழில்நுட்பம் – போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் ஜெயப்பிரதா கணேஷ், இந்திய அரசின் வர்த்தக முத்திரைகளின் துணைப் பதிவாளர் கயல்விழி, மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் அம்பாள் சரவணன் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன், துணைவேந்தர் டாக்டர் சதா ராம் சிவாஜி, சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியின இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக், முதல்வர் டாக்டர் பி. ரமேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img