fbpx
Homeபிற செய்திகள்மக்கள் தொகை தினம்: கோவையில் விழிப்புணர்வு ரதம் -பேரணி

மக்கள் தொகை தினம்: கோவையில் விழிப்புணர்வு ரதம் -பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப் புணர்வு ரதம் மற்றும் பேரணி நடைபெற்றது. இன்று உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள்
நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கோவை மாவட்ட நிர் வாகம் சார்பில் மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி நடைபெற்றது.
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் தனியார் கல்லூரிகளில் செவிலியர் பயிற்சி பெறும் மாண வர்கள், பள்ளி மாணவ மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மக்கள் தொகை தினம் குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். கோவை சுகா தாரப் பணிகள் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி ரேஸ் கோர்ஸ் வழியாக சிஎஸ்ஐ பள்ளியில் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள மாசாணிக் மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெறுகிறது
அதனைத் தொடர்ந்து கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மாவட்ட சுகாதாரப் பணி மற்றும் குடும்ப நலத்துறையினர், மாவட்ட தாய் சேய் நல அலுவலர், மாவட்ட குடும்ப நல செயலக அலுவலர்கள் பணியாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img