fbpx
Homeபிற செய்திகள்ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை மாநகர காவல்துறையினர் 650 பேருக்கு யோகா பயிற்சி

ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை மாநகர காவல்துறையினர் 650 பேருக்கு யோகா பயிற்சி

கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் மனநலனையும், உடல் நலனையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அதன்படி, உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையும், உலக சமுதாய சேவா சங்கமும், முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சங்கமும் இணைந்து இன்று (21ம் தேதி) காலை 7 மணி முதல் 8 மணி வரை காவலர்களுக்கு ‘யோகா பயிற்சி’ வகுப்பு நடத்தினார்கள்.

கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடந்த இந்த யோகா பயிற்சி வகுப்பில் ஆயுதப்படை, காவல் நிலையங்கள், சிறப்புப் பிரிவு களைச் சேர்ந்தவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், பயிற்சி காவலர்கள் மற்றும் ஊர் காவல்படையினர் உட்பட 650கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். காவலர்களுக்கு காவல்துறை பணிக்கு உகந்த யோகா பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.

யோகா பயிற்சி வகுப்பிற்கு பின் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில், யோகா செய் வதினால் மனிதனின் மன திற்கும், உடலுக்கும் ஏற்பட கூடிய நன்மைகள் குறித்தும், காவல் துறையினருக்கு யோகா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும் பேசி, அனைத்து காவல் துறையினரையும் யோகா பயிற்சி செய்ய அறிவுறுத்தி ஊக்கமளித்தார்.

மேலும் காவலர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பில் கோவை காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ஜெ.சிட்ரிக் இம்மானுவேல், ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஏ.சேகர், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தை சார்ந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி வெள்ளிங்கிரி, ஓய்வுபெற்ற எஸ்.பி. ரத்தினம், ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி நாகராசன், உலக சமுதாய சேவா சங்கத்தை சார்ந்த செல்வராஜ், முனைவர் சந்தானகிருஷ்ணன், மோட்டார் வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் கே.கோவிந்தராஜூ, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் எம்.பிரதாப்சிங் மற்றும் ஆண், பெண் காவலர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img