கோவை புலிய குளம் அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் கோவை இரண்டு பீரங்கி தேசிய மாணவர் படை பிரிவு சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி,ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி,கே.கே நாயுடு மேல் நிலைப்பள்ளி,செல்வபுரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி,ஒண்டிபுதூர் அரசு மேல் நிலைப்பள்ளி,தேவாங்கா மேல் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த தேசிய மாணவர்படை மாணவ மாணவியர் பதுமாசனம், பரிவ்ருத்த ஜானு சிரசாசனம், வீரபத்ராசனம், யோகமுத்திராசனம், பார்சுவ பாலாசனம், சிரசாசனம், உஸ்ட் ராசனம், பரிகாசனம் , நவாசனம், ஊர்த்துவ தனுராசனம், பத்ராசனம், ஆஞ்சநேயாசனம்,) உத்தானாசனம், காகாசனம், வீரபத்ராசனம், பாதாங் குஸ்தாசனம், தண்டயமன பர்மானாசனம், அஷ்டவக்கிராசனம், பாதஹஸ்தாசனம், அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம், மயூராசனம், புஜங்காசனம், கோமுக ஆசனம் ஆகியவற்றை செய்தார்கள். ஆசனங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தேசிய மாணவர்படை அலுவலர்களான ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர், நாக ராஜ், சப்தகிரி, காமராஜ், யூஜின், சக்தி,ஹவில்தார் சாரதி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் செய்திருந்தார்.