fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகரில் புதிய காவல் நிலையங்களை இன்று திறந்து வைத்தார், டிஜிபி சைலேந்திர பாபு

கோவை மாநகரில் புதிய காவல் நிலையங்களை இன்று திறந்து வைத்தார், டிஜிபி சைலேந்திர பாபு

கோவையில் பல்வேறு காவல்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கவுண்டம் பாளையம், போத்தனூர், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்களை திறந்து வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய் தியாளர்களிடம் டிஜிபி சைலேந் திரபாபு கூறியதாவது: தமிழ்நாட்டில் 1352 காவல் நிலையங்கள் இருந்தது, அதில் 202 மகளிர் காவல் நிலையங்கள் மட்டும் தான் இருந்தது.

1574 காவல் நிலையங்கள்

பிறகு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு 1574 காவல் நிலையங்கள் தற்போது உள்ளது. தற்போது போத்தனூர் பகுதியில் திறக்கப்பட்ட இந்த காவல் நிலையத்தில் 8 காவலர்கள் பொறுப்பேற்க உள்ளனர்.

துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் தற்போது கோவை மாநகர காவல் துறையுடன் இணைய உள்ளது. இதன் காரண மாக கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில் 20 காவல் நிலையங்களாக அதிகரித் துள்ளது.

இணையவழி குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். காவல்துறை சார்பில் மக்களுக்காக காவல் உதவி என்ற ஆப் அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும், ஆனால் இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளாவும் உள்ளது. இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்து விட்டார் என பதில் அளித்தார்.

மேலும் காவலர்களின் பதவி உயர்வு குறித்தான கேள்விக்கு 130 இன்ஸ்பெக்டர்களுக்கு ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து 1030 உதவி இன்ஸ்பெக் டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் படும் எனவும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img