கடந்த 55 ஆண்டுகளாக, ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி, 19 வருடங்காளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள், கோவையில் நாளை துவங்குகிறது.
இப்போட்டிகளில் அகில இந்தியஅளவில் முன்னணியில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன. நாளை (மே 27) முதல் ஜூன் 1 வரை 6 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளன.
கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும், கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செல்வராஜ், துணைத் தலைவர் பழனிசாமி, செயலாளர் பாலாஜி, பொருளாளர் ஆ.திபாலா ஆகியோர் கூறியதாவது:
ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுளன.
10 அணிகள்
ஆண்கள் பிரிவில் “லோனா வாலா” – இந்திய கப்பல் படை அணி, “புது தில்லி;” – இந்திய விமானப்படை அணி “புது தில்லி;” – இந்தியன் இரயில்வே அணி, “பெங்களூரு” – பாங்க் ஆஃப் பரோடா அணி, “திரு வனந்தபுரம்” – கேரளா போலீஸ் அணி, “சென்னை” – இந்தியன் வங்கி அணி, “சென்னை” – வருமானவரி அணி, “சென்னை” – தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி, “திருவனந்தபுரம்” – கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உட்பட 10 அணிகள் விளையாடுகின்றன.
பெண்கள் பிரிவில் “திரு வனந்தபுரம்” – கேரளா மாநில மின்சார வாரியம் அணி, “திரு வனந்தபுரம்” – கேரளா போலீஸ் அணி, “ஹூப்ளி” – தென்மேற்கு ரயில்வே அணி, “மும்பை” – மத்திய ரயில்வே அணி, “பூனே” – மேற்கு ரயில்வே அணி, – “சட்டிஸ்கர்” – எஸ்எஐ அணி, “சென்னை” – தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி மற்றும் “கோயம்புத்தூர்” – கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உட்பட 8 அணிகள் விளையாடுகின்றன.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.15, ஆயிரமும் வழங்கப்படும்.
பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்¬ பயும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம்-மும், இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங் கனை என்ற விருதும் வழங் கப்படும்.
போட்டிகள் வரும் 30-ம் தேதி வரை சுழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் 31-ம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியிலும் விளையாடும்.
அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுவார் கள். கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் தினமும் மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். இப்போட்டியை இலவசமாக காணலாம்.
நாளை மாலை 5 மணிக்கு, அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகளை, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைக்கவுள் ளார்.
கௌரவ விருந்தினராக சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனங் களின் இணை நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக தலைவருமான ஜி. செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்.
ஜூன் 1 ம் தேதி மாலை 8 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும்.



