fbpx
Homeபிற செய்திகள்பிளஸ் 2 பொதுத் தேர்வு- ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்

பிளஸ் 2 பொதுத் தேர்வு- ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இரட்டையர் வெவ்வேறு பாடப்பிரிவில் ஒரே மதிப்பெண் எடுத்துள் ளனர்.கோவை, வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சுவாமிநாதன், ஜெயசுதா தம்பதி. இவர்களது மகன் நிரஞ்சன், மகள் நிவேதா. இரட்டையரான இவர்கள் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் வெளியான பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளில் நிரஞ்சன், நிவேதா ஆகிய இருவரும் 600க்கு 530 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

நிரஞ்சன் கம்ப்யூட்டர் சயின்ஸ், நிவேதா பிசினஸ் மேத்ஸ் என வெவ்வேறு பிரிவுகளில் படித்தாலும், வெவ்வேறு நாள்களில் தேர்வு எழுத சென்றாலும் ஒரே மதிப்பெண் பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img