fbpx
Homeபிற செய்திகள்அதிமுக ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கிய கோ ஆப்டெக்ஸ் ரூ.20 கோடி லாபத்துடன் இயங்கி வருகிறது- கோவையில்...

அதிமுக ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கிய கோ ஆப்டெக்ஸ் ரூ.20 கோடி லாபத்துடன் இயங்கி வருகிறது- கோவையில் அமைச்சர் காந்தி பேட்டி

அதிமுக ஆட்சியின் போது ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த கோ ஆப்டெக்ஸ் தற்போது ரூ.20 கோடி லாபத்துடன் இயங்கி வருகிறது என கைத்தறி துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கைத்தறிகளுக் கான பிரேத்யேக சந்தைப் பிரிவை உருவாக்கி, விற்பனையை ஊக்குவிக்க” ஹேண்டுலூம்ஸ் ஆப் இந்தியா” என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடி ஏற்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவை சாய் பாபா காலனியில் மாநில அரசின் கைத்தறி ஆதரவு திட்ட நிதி உதவியுடன் ரூ.50 லட்சம் செலவில் நவீன படுத்தப்பட்டு “ ஹேண்டுலூம்ஸ் ஆப் இந்தியா” ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையம் மற்றும் கோ ஆப்டெக்ஸ் பால முருகன் ஆகிய புதுப்பிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை கைத்தறி, கைத்திறன், துணிநூல் துறை அமைச்சர் காந்தி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்து உள்ள நிலையில், கைத்தறி துறை முன்னேற்றம் அடைந்து உள்ளது.

மேலும், துணி நூல் மற்றும் நெசவாளர் முன்னேற்றத் திற்கு சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோ ஆப்டெக்ஸ் நாங்கள் ஆட்சிக்கு வரும் போது களையிழந்து இருந்தது.

சீரமைப்பு பணிகள்

இதையடுத்து, அதனை புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது. அதன்படி, 45 கடைகள் சீரமைக்கப்பட்டது. மேலும், கடந்த ஆட்சியின் போது இத்துறை ரூ.9 கோடி நஷ்டத்தில் இருந்தது. தற்போது ரூ.20 கோடி லாபம் அடைந்து உள்ளது. இந்த லாபத்தில் ரூ.10 கோடியில் விற்பனையாகங்கள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று உள்ளது.

மேலும், விற்பனை அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய துணிகள், வெளிமாநிலங்களில் உள்ள கைத்தறி துணிகள் கொண்டு வரப் பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோவையில் ஒரு கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று உள்ளது. நெசவாளர் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளை தோடர்கள் சொசைட்டி அமைத்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவையில் 18 மில்கள் இருந்த நிலையில் தற்போது 6 மில்கள் தான் உள்ளது.

அதுவும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். கைத்தறி துறையில் இந்தியாவில் 2- வது இடத்தில் உள்ளோம். கைத்தறி துறையை தனியாக பிரித்து டெக்ஸ்டைல் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் மெகா டெக்ஸ்டைல் பார்க் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் துவக்க விழாவில் பிரதமர் அழைக்கப்படுவார் என முதல்வர் தெரிவித்துள்ளார். என்டிசி ஆலை பிரச்சினை போது என்னையே உள்ளே அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மண்டலக் குழு தலைவர் மீனா லோகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img