fbpx
Homeபிற செய்திகள்60 விதமான இலவச தொழிற்பயிற்சிகள்: கோவை கனரா வங்கி பயிற்சி மையத்துக்கு சாதனையாளர் விருது

60 விதமான இலவச தொழிற்பயிற்சிகள்: கோவை கனரா வங்கி பயிற்சி மையத்துக்கு சாதனையாளர் விருது

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளை யம் புதுப்புதூரில் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு சான்றிதழோடு முற்றிலும் இலவசமாக 60 விதமான பயற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாநில அளவில் சிறப்பாக பயிற்சி அளித்தமைக்காக சாதனையாளர் விருது கோவை பயற்சி மையத்திற்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதன்மை செயலாளர் அமுதா வழங்கினார். விருதை பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

பயிற்சி மையத்தில் தொழில் முனைவோர் பண்புகளுடன், வங்கி மானிய கடன் ஆலோசனையும் வழங்கப்படுகின்றன. 18 வயது முதல் 45 வயது வரை 8ம் தேறிய அனைவரும் விண்ணப்பிக்கலாம். இங்கே பயின்று வெற்றி பெற்ற சாதனையாளர் களின் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

பயிற்சியின் போது தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணம் அனைத்தும் இலவசம். கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சிகளுக்கு இயக்குநர் அலுவலக கைபேசி 9489043926 எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள் ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img