fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ப.சிதம்பரம் எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவையில் ப.சிதம்பரம் எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கமிட்டி சார்பில் புலியகுளம் விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.பார்த்திபன், மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஹரி ஹர சுதன் தலைமை தாங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் கோவை செல்வம், கோவை மாந கராட்சி கவுன்சிலர் சரவணகுமார், முன்னாள் கவுன்சிலர் சோபனா செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்கள்.

விழாவில் சர்க்கிள் தலைவர் கணேசன் செரி லூயிஸ் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img