கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் மார்னிங் ஸ்டார் ( விடிவெள்ளி) கலையரங்கத்தில் கடந்த 21ம் தேதி காலை 9.30 மணியளவில் கிறிஸ்துமஸ் நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அருட்தந்தை லாரன்ஸ் நற்செய்தி வழங்கினார். பல்வேறு கிறிஸ்துமஸ் பாடல்களை அருட் சகோதரிகள், அலு வலகப் பணியாளர்கள் பாடினர்.
மாணவியர் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியதோடு இயேசுவின் பிறப்பினை நிழல் நாடகம் மூலம் நடித்தும் காட்டினர். மாணவியரின் நடனநிகழ்ச்சியும் இடம் பெற்றது.
அனைவருக்கும் கேக் வழங்கினர்.