fbpx
Homeபிற செய்திகள்உழவர்களுக்கு இடு பொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்கவேண்டும்: பாமக மாநாட்டில் தீர்மானம்

உழவர்களுக்கு இடு பொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்கவேண்டும்: பாமக மாநாட்டில் தீர்மானம்

திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் அத்தியந்தல் அருகில் உள்ள மைதானத்தில் பாமக தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களிடையே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் .பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பேசி னார்கள்.

டாக்டர் ராமதாஸ் பேசுகையில், விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். இப்பொழுது தலைகீழாக மாறிவிட்டார். திராவிட மாடல் அரசு விவசாயிகளை படுகுழியில் தள்ளி விட்டது, என்றார்.

பிறகு 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை. தமிழ்நாடு உழவர்களின் பிரச்சனைகளை குறித்து ஆராயவும் அவர்களுக் கான தீர்வுகள் குறித்து பரிந்துரைக்கவும் உழவர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும் .அனைத்து வேளாண் விலை பொருட்களும் கொள்முதல் விலை உத்த ரவாதமும் அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் உழ வர்களுக்கு இடு பொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ. 10,000 வழங்கவேண்டும்.

மத்திய அரசு உழவர் மூலதன மானியத்தின் அளவை ரூ. 12,000ஆக உயர்த்த வேண்டும். நீர் நிலைகளை தாரை வாக்கும் நில ஒருங்கிணைப்பு சட் டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்க தனி வாரியம் அமைக்க வேண் டும் உழவர்களின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வட்டி மானியம் வழங்க வேண்டும். பேரிடர் காலங்கள் பாதிக்கப்படும் பயிர்க ளுக்கு இழப்பீடு வழங்குவ தற்காக தனி கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் மூடப்பட்ட மணல் கோரைகள் மீண்டும் திறக்க கூடாது.

நந்தன் கால்வாய் திட்டம் மற்றும் தென்பண்ணை துரிஞ்சல் ஆறு இணைப்பை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் திருவண் ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இனி வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க உரிய முன் னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள் ளும்படி மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் பாமக மாநில கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, தமிழ்நாடு உழவர் பேரிழக்க மாநில தலைவர் ஆலய மணி, மாநில செயலாளர் வேலுச்சாமி, பாமக மாநில பொருளாளர் திலகபாமா, பாமக மாவட்ட செய லாளர் ஏந்தல். பெ.பத் மாசலம், இ,பாண்டியன் உள்ளிட்டோர் பலர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img